பாமகவில் நடைபெற்று வரும் அப்பா மகன் சண்டையில் பல உண்மைகள் வெளியே வரும் காடுவெட்டி குரு எவ்வாறு இறந்தார் என்பது குறித்த உண்மையும் வெளியில் வரும் என காடுவெட்டி குரு கனல் பேட்டி

பாமகவில் நடைபெற்று வரும் அப்பா மகன் சண்டையில் பல உண்மைகள் வெளியே வரும்  காடுவெட்டி குரு எவ்வாறு இறந்தார் என்பது குறித்த உண்மையும் வெளியில் வரும் என காடுவெட்டி குரு கனல் பேட்டி
X
பாமகவில் நடைபெற்று வரும் அப்பா மகன் சண்டையில் பல உண்மைகள் வெளியே வரும் காடுவெட்டி குரு எவ்வாறு இறந்தார் என்பது குறித்த உண்மையும் வெளியில் வரும் என காடுவெட்டி குருவின் மகனும் மாவீரன் மஞ்சள் படையின் நிறுவனத் தலைவர் குருகனலரசன் தெரிவித்தார்
அரியலூர், ஜூன்.22- பாமகவில் நடைபெற்று வரும் அப்பா மகன் சண்டையில் பல உண்மைகள் வெளியே வரும் காடுவெட்டி குரு எவ்வாறு இறந்தார் என்பது குறித்த உண்மையும் வெளியில் வரும் என காடுவெட்டி குருவின் மகனும் மாவீரன் மஞ்சள் படையின் கனலரசன் தெரிவித்தார்* அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள காடுவெட்டியில் காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் தலைமையில் செயல்படும் மாவீரன் மஞ்சள் படையின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது இதில் கட்சி உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டையை கனலரசன் வழங்கினார் கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கையை தீவிர படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன செய்தியாளர்களிடம் பேசிய மாவீரன் மஞ்சள் படையின் தலைவர் கனலரசன் பாமக வில் நடைபெற்று வரும் பிரச்சனைக்கு நீயா நானா என்ற ஈகோதான் காரணம். இவர்கள் இருவருக்குள்ளும் நடைபெற்று வரும் இந்த சண்டையால் லட்சக்கணக்கான வன்னியர் இன மக்கள் மற்றும் கட்சியின் பொறுப்பாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது இந்த சண்டையால் பல்வேறு விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டிய நிலைக்கு இருவரும் தள்ளப்பட்டுள்ளனர் மாவீரன் காடுவெட்டி குருவை அன்புமணி சரியாக கவனிக்கவில்லை என ராமதாஸ் கூறியுள்ளார் இதே போல் பல உண்மைகள் வெளியில் வரும் காடுவெட்டி குரு எவ்வாறு இறந்தார் என்பது குறித்த உண்மையும் வெளியில் வரும் எனக் கூறினார்.பாமகவை வேண்டுமானால் அவர்கள் நடத்தலாம் வன்னியர் சங்கத்தை யார் நடத்துகிறார்கள் வன்னியர் சங்க மாநாட்டில் கட்சியை பற்றி பேசுகிறார்கள் குடும்ப சண்டை பற்றி பேசுகிறார்கள் ஆனால் வன்னியர்களுக்கான குரல் யார் கொடுக்கிறார்கள் வன்னியர்களுக்கான பாதுகாப்பான குரல் என்று எங்கு உள்ளது. அதற்காக தான் நாங்கள் வந்துள்ளோம் வன்னியர் சங்கத்துக்காக செயல்படுகிறோம். சொன்ன வார்த்தையை காப்பாற்றாத காரணத்தினால் மக்கள் பாமகவை தேர்தலில் கைவிட்டனர். சொன்ன வார்த்தையை காப்பாற்றி இருந்தால் மக்கள் இவர்களை காப்பாற்றி இருப்பார்கள் சொன்னதை செய்யாததால் மக்கள் இவர்களை கைவிட்டார்கள். தமிழ்நாட்டில் அதிக இளைஞர்கள் அதிக பெண்களை கொண்ட சமுதாயமாக உள்ள சமுதாயத்திற்கு சரியான தலைமை இல்லாமல் உள்ளனர் எனவே இவர்களை ஒரு தலைமையின் கீழ் கொண்டு வரும் பணியைத்தான் மாவீரன் மஞ்சள் படை செய்து வருகிறது தேர்தலில் போட்டியிடுவதா வேண்டாமா என்று அப்போதைய சூழலில் முடிவு செய்யப்படும் எனக் கூறினார் பாமக கட்சியை தனது மகனுக்காக தான் ராமதாஸ் நடத்தி வந்தார் அதை அவரே சொல்லி உள்ளார் நான் இருக்கும் வரை தலைவராக இருக்கேன் எனக்கு பிறகு நீ தானே என இராமதாசே சொல்லியுள்ளார் அதனால் இருவருக்கும் உள்ள பிரச்சனையால் இருவரும் பிரிவதற்கான வாய்ப்பு இல்லை என கூறினார்.கூட்டத்தில் மாவீரன் மஞ்சள் படை அரியலூர் மாவட்ட செயலாளர் குமார் உள்ளிட்ட மாநில மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
Next Story