ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே நடப்பது ஈகோ பிரச்சனைதான்: பாமக கட்சியை அழிப்பதால் தொண்டர்கள்தான் பாதிக்கப்படுவார்கள் குரு கனல் பேட்டி

ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே நடப்பது ஈகோ பிரச்சனைதான்: பாமக கட்சியை அழிப்பதால் தொண்டர்கள்தான் பாதிக்கப்படுவார்கள் குரு கனல் பேட்டி
X
ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே நடப்பது ஈகோ பிரச்சனைதான்: பாமக கட்சியை அழிப்பதால் தொண்டர்கள்தான் பாதிக்கப்படுவார்கள் என குரு கலைரசன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அரியலூர், ஜூன்.22- ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே நடப்பது ஈகோ பிரச்சனைதான்: பாமக கட்சியை அழிப்பதால் தொண்டர்கள்தான் பாதிக்கப்படுவார்கள்: ராமதாஸ் அழைத்தால் செல்வேனா மாட்டேனா என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும் என மாவீரன் மஞ்சள் படை நிறுவனத் தலைவரும் மறைந்த முன்னாள் வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் மகனுமான கண்ணதாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காடுவெட்டி கிராமத்தில் மாவீரன் மஞ்சள் படை கட்சியின் உறுப்பினர் சேர்க்கை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மாவீரன் மஞ்சள் படையின் நிறுவனத் தலைவர் கணலரசன் செய்தியாளரிடம் அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:-பாமக நிறுவனர் ராமதாசுக்கும் அன்புமணிக்கும் இடையே நடக்கும் பிரச்சனை ஈகோ பிரச்சனைதான். இவர்கள் போட்டி போட்டுக் கொண்டு நடைபெறும் பிரச்சனைகளால் கட்சி அழிவு பாதையை நோக்கி செல்கிறது என்பது வருத்தமாக உள்ளது. பாமகவை நம்பி வந்த தொண்டர்களை பற்றி இவர்களுக்கு கவலை இல்லை என்பதை நினைக்கும்போது வருத்தமாக உள்ளது. தற்போது பாமகவில் இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பாமக கட்சிக்குள்ளே கலவரம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பாமகவை மக்கள் புறக்கணித்து விட்டார்கள். காடுவெட்டி குருவின் ஆன்மா சும்மா விடாது. காடுவெட்டி குருவின் பெயரைச் சொல்லாமல் அவர்களால் அரசியல் செய்ய முடியாது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதையும், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் நிர்வாகிகளுடன் ஆலோசித்து பிறகு முடிவை அறிவிப்போம். பாமக நிறுவனர் ராமதாஸ் அழைத்து கட்சியில் பொறுப்பு கொடுத்து சேர்வதற்கு அழைப்பு விடுத்தால் சேருவீர்களா என்று கேட்கிறீர்கள். அதற்குக் காலம் தான் பதில் சொல்லும். தேவர் ஜெயந்தி விழாவை கொண்டாடுவதை போன்று வன்னியர் ஜெயந்தி விழாவை கொண்டாட வேண்டும் என்றும் காடுவெட்டி குருவின் நினைவு மண்டபத்தில் கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்துவதே எங்களது லட்சியம் என்றார்.
Next Story