பாமக சொன்னதை செய்யாததால் மக்கள் அவர்களை தேர்தலில் கைவிட்டனர். ஒரு மாவட்டத்தில் ஒரே பொறுப்புக்கு இரண்டு பொறுப்பாளர்கள் அறிவித்து அடித்துக் கொள்ள விடுவதாக கனலரசன் பேட்டி

X
பாமக சொன்னதை செய்யாததால் மக்கள் அவர்களை தேர்தலில் கைவிட்டனர். ஒரு மாவட்டத்தில் ஒரே பொறுப்புக்கு இரண்டு பொறுப்பாளர்கள் அறிவித்து அடித்துக் கொண்டுள்ளனர்.கட்சியை வேண்டுமானால் அவர்கள் நடத்தலாம் ஆனால் வன்னியர் சங்கத்தை நாங்கள் தான் நடத்தி வருகிறோம் என குரு கடலரசன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அரியலூர், ஜூன்.22- பாமக சொன்னதை செய்யாததால் மக்கள் அவர்களை தேர்தலில் கைவிட்டனர். ஒரு மாவட்டத்தில் ஒரே பொறுப்புக்கு இரண்டு பொறுப்பாளர்கள் அறிவித்து அடித்துக் கொண்டுள்ளனர். அரசியல் அனுபவம் உள்ள ஒருவர் இது போன்று செயல்களை செய்யக்கூடாது.*அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே காடுவெட்டியில் மாவீரன் மஞ்சள் படையின் செயற்குழு கூட்டம் அலுவலகத்தில் நடைபெற்றது. இது மாவீரன் மஞ்சள் படையின் நிறுவனர் மற்றும் தலைவர் கனலரசன் உறுப்பினர்கள் அட்டையை வழங்கினார். எந்த செயற்குழு கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் கனலரசன் பேட்டி; யார் இன்று வன்னியர் சங்கத்தை நடத்துவது கட்சியை வேண்டுமானால் அவர்கள் நடத்தலாம் வன்னியர் சங்கத்தை யார் நடத்துகிறார்கள் வன்னியர் சங்க மாநாட்டில் கட்சியை பற்றி பேசுகிறார்கள் குடும்ப சண்டை பற்றி பேசுகிறார்கள் ஆனால் வன்னியர்களுக்கான குரல் யார் கொடுக்கிறார்கள் வன்னியர்களுக்கான பாதுகாப்பான குரல் என்று எங்கு உள்ளது என்று நாங்கள் வந்துள்ளோம் வன்னியர் சங்கத்துக்காக செயல்படுகிறோம். அன்புமணி அவர்களை கட்சிக்கு கொண்டு வந்து நான் தவறு செய்து விட்டேன் என்று ஒப்புக்கொண்டார். அரசியல் பயணத்தில் எல்லாமே நடந்தது சொன்ன வார்த்தையை காப்பாற்ற காரணத்தினால் மக்கள் அவர்களை தேர்தலை கைவிட்டனர். கும்பகோணம் மாநாட்டில் தனித்திறின்று நான்கு எம்எல்ஏ பெற்றோம் இப்போது கூட்டணியில் நின்று 5 எம்எல்ஏ பெற்றுள்ளோம் என்று அவரை கூறியுள்ளார். இதனால் தேர்தலில் மக்கள் அவர்களை கைவிட்டு விட்டார்கள் சொன்ன வார்த்தையை காப்பாற்றி இருந்தால் மக்கள் இவர்களை காப்பாற்றி இருப்பார்கள் சொன்னதை செய்யாததால் மக்கள் இவர்களை கைவிட்டார்கள்.சொல்லப்போனால் இத்தனை ஆண்டு காலம் அரசியல் செய்ததற்கு அர்த்தம் இல்லாமல் போய்விட்டது. மிகுந்த ஒரு அரசியல் அனுபவம் உள்ள தலைவர் இதுபோன்று ஒரு விஷயம் செய்யும் பொழுது பொறுப்பாளர்கள் அடித்துக் கொண்டு இருக்கின்றனர். ஒரே மாவட்டத்தில் ஒரு பொறுப்புக்கு இரண்டு பொறுப்பாளர்கள் அறிவிக்கப்படுகிறார்கள் அதற்காக இரண்டு மாவட்ட செயலாளரும் அடித்துக் கொள்கிறார்கள். விரைவில் இது வெட்டுக்குத்தாக மாறும் போல் தெரிகிறது. ஐயா அணியா சின்னையா அணியா என கட்சி அழிப்பதற்கான விதையை இவர்களே துவக்கி வைத்து விட்டார்கள். இதிலிருந்து தெரிகிறது சரியான அரசியல் அணுகுமுறை கிடையாது இவர்கள் அனுபவத்திற்கு இதுபோன்று செய்திருக்கக் கூடாது.
Next Story

