திருமருகல் ரத்தினகிரீஸ்வர சுவாமி திருக்கோவில் தேர் வெயிலிலும், மழையிலும் நனைந்து பலகீனம்

தேர் நிற்குமிடத்திற்கு மேல் மேற்கூரை அமைத்து பாதுகாக்க பக்தர்கள் கோரிக்கை
நாகை மாவட்டம் திருமருகல் ஆமோதள நாயகி சமேத ரத்தினகிரீஸ்வர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில், திருமண தடை நீங்கும் ஸ்தலமாக விளங்குகிறது, இக்கோயிலில், கடந்த 2023 -ம் ஆண்டு மார்ச் மாதம் 27-ம் தேதி கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இந்த திருக்கோயில், சோழ நாட்டின் மூர்த்தி, தலம். தீர்த்தம் மூன்றிலும் சிறந்து விளங்கும் 18 திருத்தலங்களில் முதன்மையானது, பாம்பு தீண்டி இறந்த வணிகரை ஞானசம்பந்தர் பதிகம் பாடி உயிர்ப்பித்து திருமணம் செய்து வைத்த ஸ்தலமாகும். இக்கோயில், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகவும் விளங்குகிறது. இக்கோயிலில், கடந்த 3 ஆண்டுகளாக தேரோட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால், அந்தத் தேர் வெயிலிலும், மழையிலும் நனைந்து பலகீனமடைந்து உள்ளது. பெரும் மழை, புயலின் போது, எதிர்பாராத விதமாக மேற்கூரை முறிந்து விழுந்தால், அசம்பாவிதம் ஏற்பட்டு விட்டதாக பக்தர்கள் நினைக்கும் நிலை ஏற்பட்டு விட கூடாது. எனவே. ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் வடிவமைக்கப்பட்ட இந்த தேர், நிற்குமிடத்திற்கு மேல் மேற்கூரை அமைத்து பாதுகாக்குமாறு பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, சம்பந்தப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, தேருக்கு மேல் கூரை (செட்) அமைத்து தர வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story