பேரூராட்சி தலைவர் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

X
கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வடமதுரை பேரூராட்சியில் நடந்த தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு அப்பகுதியை சேர்ந்த சிவச்செல்வி மற்றும் நிருபாராணிகணேசன் என்பவரும் போட்டியிட்டனர் தேர்தலின் முடிவில் நிருபராணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து வடமதுரை பேரூராட்சி தலைவராக பொறுப்பேற்றார். வெற்றியை எதிர்த்தும், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக கூறி திண்டுக்கல் நீதிமன்றத்தில் சிவ செல்வி வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதில் தேர்தலில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என்று திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி முத்துசாரதா அவர்கள் உத்தரவிட்டார். மேலும் சிவசெல்வி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ததுடன். நிருபாராணி தொடர்ந்து வடமதுரை பேரூராட்சி தலைவராக பணியாற்றலாம் என்று தீர்ப்பளித்தார்.
Next Story

