அரியலூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் செய்தர வலியுறுத்தல்

அரியலூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் செய்தர வலியுறுத்தல்
X
அரியலூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் செய்துத் தர வேண்டும் என தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரியலூர்,ஜூன் 22கே அரியலூரிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அக்கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 2026 சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் தேமுதிக கழக பொதுச் செயலர் பிரேமலதா போட்டியிட வேண்டும். அரியலூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் மின்விசிறிகள், குடிநீர், கழிப்பிடம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும். மருத்துவமனையை சுற்றி தேங்கி நிற்கும் சாக்கடை தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரியலூர் } வி.கைகாட்டி சாலையை இருவழிச் சாலையாக தரம் உயர்த்தி சாலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் ராம.ஜெயவேல் தலைமை வகித்தார். முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும், அக்கட்சியின் துணைச் செயலருமான சுபாரவி கலந்து கொண்டு, அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதிகளின் பொறுப்பாளர்களை அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றினார். மாவட்ட அவைத் தலைவர் வேல்முருகன், பொருளாளர் சக்திவேல், மாவட்ட துணைச் செயலாளர்கள் தெய்வசிகாமணி, சக்திபாண்டி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆனந்தன், ஜேக்கப், பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயவேல், மோகன்தாஸ், கருப்பையா, இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகரச் செயலர் தாமஸ்ஏசுதாஸ் வரவேற்றார். முடிவில் தெற்கு ஒன்றியச் கழக செயலர் சசிகுமார், வடக்கு அவைத் தலைவர் ரவி ஆகியோர் நன்றி கூறினார். :
Next Story