காங்கேயத்தில் காவல்துறை  சார்பில் விழிப்புணர்வுக் கூட்டம்

காங்கேயத்தில் காவல்துறை  சார்பில் விழிப்புணர்வுக் கூட்டம்
X
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் காவல் துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம்  நடைபெற்றது. மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக் தலைமை  வகித்தார்.
காங்கேயம், தாராபுரம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் காவல்துறையின் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் சார்பில்  நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ்  அசோக் தலைமை வகித்து, உரையாற்றினார். இதில் ஆவர் பேசியபோது சமூகத்தில் குற்றச்  சம்பவங்களை தடுப்பது குறித்தும், பெற்றோர்  தங்கள் குழந்தைகளை கண்காணிப்புடன்  வளர்ப்பது குறித்தும் எடுத்துரைத்தார்.   மேலும் இதில், சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் துணை கண்காணிப்பாளர் எஸ்.வெற்றிவேந்தன், அரசு சிறப்பு வழக்குரைஞர் மனோகரன், அரசு உதவி வழக்கறிஞர் இந்துமதி, காங்கேயம் டிஎஸ்பி., மாயவன் ஆகியோர் உரையாற்றினர். நிறைவில் போலீஸார் பங்கேற்றுப் பாடிய இசைக் கச்சேரியும் நடைபெற்றது.   இந்த நிகழ்ச்சியில், காங்கேயம் காவல் ஆய்வாளர் செல்வநாயகம் மற்றும் வெள்ளகோவில் காவல் ஆய்வாளர் ஞானபிரகாஷ் காங்கேயம், வெள்ளகோவில், ஊத்துக்குளி, ஊதியூர் பகுதி காவல் நிலையங்களைச் சேர்ந்த போலீஸார், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story