அன்புவனத்துக்கு கேரளா கைவினை கழக தலைவர் வருகை

X
கன்னியாகுமரி, சாமிதோப்பு அய்யா வைகுண்ட அன்புவனத்திற்கு கேரள மாநிலம் கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு கழகத்தின் தலைவர் ராமபத்திரன் வருகை தந்தார். அவரை அன்புவனம் நிறுவனர் குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளார் , நிர்வாகி டாக்டர் ஆர் தர்ம ரஜினி ஆகியோர் வரவேற்றனர் . மேம்பாட்டு கழக தலைவர் அய்யா வழிபாட்டு முறை அய்யா வைகுண்ட சாமியின் வாழ்க்கை வரலாறு போன்றவை பற்றி கேட்டு அறிந்தார். பின்னர் அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் உள்ள அய்யா வைகுண்ட தொல்பொருள் கண்காட்சியை பார்வையிட்டார். அவருடன் முருகேசன் உட்பட பலர் வருகை தந்தனர்.
Next Story

