மேட்டுப்பட்டி பிரிவு அருகே கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.
மேட்டுப்பட்டி பிரிவு அருகே கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து. ஒருவர் படுகாயம். தூத்துக்குடி மாவட்டம் , கயத்தாறு , உமறுப் புலவர் தெருவை சேர்ந்தவர் முகமது உசேன் வயது 67. இவருக்கு சொந்தமான காரில் ஜூன் 20ஆம் தேதி மதியம் 2:30 மணி அளவில் , கரூர் - மதுரை சாலையில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் அரவக்குறிச்சி காவல் எல்லைக்குட்பட்ட மேட்டுப்பட்டி பிரிவு அருகே வந்தபோது , அதே சாலையில் பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத மற்றொரு வாகனம் முகமது உசேன் ஓட்டிச் சென்ற கார் மீது மோதி விட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது. இந்த விபத்தில் முகமது உசேன் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை அரவக்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக முகமது உசேன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் , மோதிவிட்டு நிற்காமல் சென்ற அந்த வாகனம் எது? வாகனத்தின் ஓட்டுனர் யார்? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.
Next Story




