அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் யோகா தின விழா

X
Komarapalayam King 24x7 |22 Jun 2025 5:58 PM ISTகுமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் யோகா தின விழா கொண்டாடப்பட்டது.
உலக யோகா தினத்தையொட்டி குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் யோகா தின விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் ஆடலரசு தலைமை வகித்தார். மாணவர்கள் பெருமளவில் பங்கேற்று யோகாசனங்களை செய்தனர். சிறந்த முறையில் ஆசனங்களை செய்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. யோகாசனங்களின் முக்கியத்துவம் குறித்து என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமி, மாணவர்களிடம் எடுத்துரைத்தார். இவர் கூறியதாவது: செப்டம்பர் 2014 ல், இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி தனது ஐ.நா. உரையில், ஜூன் 21 அன்று ஆண்டுதோறும் யோகா தினத்தை கொண்டாட பரிந்துரைத்தார். ஆரம்ப முன்மொழிவைத் தொடர்ந்து, ஐ.நா. 2014 இல் "யோகா தினம்" என்ற வரைவுத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. இந்திய பிரதிநிதிகள் குழுவால் ஆலோசனைகள் கூட்டப்பட்டன. 2015 இல், இந்திய ரிசர்வ் வங்கி சர்வதேச யோகா தினத்தைக் குறிக்க 10 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
