வை. புதூரில் சிறந்த மதிப்பெண் பெற்ற முதல் மூன்று மாணவர்களுக்கு கல்வி விருது

குளித்தலை ஒன்றிய தவெக சார்பில் ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்
தமிழக வெற்றிக் கழகம் நிறுவனத் தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் வை.புதூர் கிராமத்தில் குளித்தலை ஒன்றிய இணைச் செயலாளர் தியாகராஜன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் வை.புதூர் கிராமத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற முதல் 3 மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை தலா ரூ.1000 வழங்கப்பட்டது. மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி, மாவட்ட இணை செயலாளர் சதாசிவம், குளித்தலை ஒன்றிய செயலாளர் நரேஷ் குமார், உள்ளிட்ட ஒன்றிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Next Story