ரோஸ் கார்டனில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் கொடியேற்று விழா
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் படியூர் ஊராட்சி ரோஸ் கார்டன் பகுதியில் எஸ்டிபிஐ கட்சின் 17-ம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. காங்கேயம் தொகுதி செயலாளர் மகபூப் பாஷா தலைமையில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர்கள் A.அக்பர் அலி,ஹாஜி.R. இதயத்துல்லா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் திப்பு சுல்தான் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் காங்கேயம் தொகுதி தலைவர் ராஜா முகம்மது,பொருளாளர் வெங்கடேஷ், துணைச் செயலாளர் சர்புதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் ரோஸ் கார்டன் கிளை நிர்வாகிகள் அசேன், சிராஜ் தீன், பக்ருதீன் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story



