ஆதித்தமிழர் பேரவை ஒன்றிய செயற்குழு கூட்டம்..

X
Rasipuram King 24x7 |22 Jun 2025 7:44 PM ISTஆதித்தமிழர் பேரவை ஒன்றிய செயற்குழு கூட்டம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியம் நேரு நகரில் ஆதித்தமிழர் பேரவை ஒன்றிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் வீரத்திருமகன் அருள் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் கௌதம் வரவேற்புரை ஆற்றினார். சிறப்புரையாக. மணிமாறன் மாவட்ட செயலாளர். வேங்கை மாவட்ட தலைவர். மணிகண்டன் நிதி செயலாளர். துணைச் செயலாளர் வீரமணி. துணைத் தலைவர் முருகேசன். அமைப்புச் செயலாளர் சண்முகம். கொள்கை பரப்புச் செயலாளர் அருள்மணி. மாவட்ட மகளிர் அணி செயலாளர் நதியா. மகளிர் அணி தலைவர் தீபா. மற்றும் மாநகரச் செயலாளர் சந்திரன். ஒன்றிய செயலாளர் பெருமாள். மணிகண்டன். இளைஞரணி செயலாளர் சக்திவேல்மற்றும் நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானம் 1. மூன்று சதவீதம் 3 சதவீத உள் ஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவாக இருந்த திராவிட முன்னேற்றக் கழக தலைவர் தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒவ்வொரு ஒன்றியம் ஒவ்வொரு கிராமம் நன்றி தெரிவிக்கும் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதியாக முருகேசன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
Next Story
