மாற்றுத் திறனாளிகளுக்கு குடிமனைப் பட்டா வழங்க கோரிக்கை

X
தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் ஒன்றியம், ஊரணிபுரம் விஜயலட்சுமி திருமண மண்டபத்தில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின், 4ஆவது ஒன்றிய மாநாடு ஏ.தில்லையம்மாள் தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன் மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார். மாவட்ட துணைச் செயலாளர்கள் சி.ஏ.சந்திரபிரகாஷ், ஏ.சாமியப்பன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.மதியழகன், எம்.தங்கப்பன், எம்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநிலக்குழு உறுப்பினர் டி.கணேசன் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து பேசினார். நிர்வாகிகள் மாநாட்டில், ஒன்றியத் தலைவராக துரைராஜ், ஒன்றியச் செயலாளராக கோவி.ராதிகா, ஒன்றிய பொருளாளராக ஏ.தில்லையம்மாள், துணைத் தலைவர்களாக விஜயா, பெருமாள் ஆகியோர் உள்ளிட்ட 17 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. தீர்மானங்கள் திருவோணத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உடனடியாக 100 நாள் வேலை கொடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்ப அட்டைகளை ஏஏஒய் குடும்ப அட்டைகளாக மாற்றி மாதம் தோறும் இலவசமாக 35 கிலோ அரிசி வழங்கிட வேண்டும். குடிமனை இல்லாத ஏழை, எளிய மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச குடிமனை, வீடு கட்டி கொடுக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story

