தரகம்பட்டி- திடீரென டாட்டா ஏஸ் வாகனத்தை வலது புறம் திருப்பியதால் பின்னால் வந்த டூவீலர் மோதி விபத்து.
தரகம்பட்டி- திடீரென டாட்டா ஏஸ் வாகனத்தை வலது புறம் திருப்பியதால் பின்னால் வந்த டூவீலர் மோதி விபத்து. கரூர் மாவட்டம் , கடவூர் தாலுகா , மாவத்தூர் அருகே சின்னாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தெய்வானை வயது 57. இவரது மகன் ராஜாராம் வயது 25. இருவரும் ஜூன் 19 மதியம் 3:30 மணியளவில் , தரகம்பட்டியில் இருந்து வையம்பட்டி செல்லும் சாலையில் டூ வீலரில் சென்றனர். இவர்களது வாகனம் குஜிலியம்பாறை பிரிவு ரோடு அருகே வந்த போது, கரூர் மாவட்டம், மணவாடி ,செல்வம் நகரை சேர்ந்த செல்வம் வயது 47 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டாடா ஏஸ் வாகனம் ராஜாராம் ஓட்டிய டூவீலரை முந்தி சென்று எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல் திடீரென வலது புறம் திருப்பிதால், ராஜாராம் ஓட்டி சென்ற டூவீலர் டாட்டா ஏஸ் வாகனத்தில் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் டூவீலரில் பயணித்த தாய் மற்றும் மகன் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டதால் உடனடியாக அவர்களை அருகில் உள்ள மயிலம்பட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக ராஜாராம் அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சாலை விதிகளுக்கு மாறாக டாட்டா எஸ் வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்திய செல்வம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் பாலவிடுதி காவல்துறையினர்.
Next Story





