ஜெயங்கொண்டம் அருகே இருசக்கர வாகன விபத்து: ஒருவர் உயிரிழப்பு கால் எலும்பு முறிந்து மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது சம்பவம்

X
ஜெயங்கொண்டம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இடங்கண்ணி காமராஜர் நகரைச் சார்ந்த இளையராஜா என்கின்ற ராஜீவ் காந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் அதே ஊரைச் சேர்ந்த உறவினர் முருகேசன் என்பவர் கால் முறிவு ஏற்பட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அரியலூர், ஜூன்.22- அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள இடங்கண்ணி காமராஜ் நகரை சேர்ந்த இளையராஜா என்கிற ராஜிவ்காந்தி (40) இவரது உறவினர் ஒருவர் கோடாலி கிராமத்தில் இறந்த துக்க நிகழ்ச்சிக்கு தனது ஊரை சேர்ந்த முருகேசன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு மீண்டும் இடங்கண்ணி திரும்பி வரும் போது கோடாலி கருப்பூர் கீழகுடிகாடு பகுதியில் செல்லும் போது சாலையின் வளைவில் உள்ள பாலத்து கட்டையில் மோதி இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் இளையராஜா என்கிற ராஜீவ்காந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். முருகேசன் கால் எலும்பு உடைந்து நிலையில் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து தா.பழூர் போலிசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து போன இளையராஜா என்கின்ற ராஜீவ்காந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

