கிண்டியில் உலகிலேயே மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனை: அமைச்சர் அதிரடி அறிவிப்பு

சென்னை கிண்டியில் இன்னும் இரண்டு ஆண்டுக்களுக்குள் குழந்தைகள் உயர் பன்னோக்கு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் தொடங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை அருகில், புதியதாக குழந்தைகளுக்கு என்று பிரத்தியேக உயர் பன்னோக்கு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமான பணி குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “உலக அளவில் மிகப்பெரிய குழந்தைகளுக்கான பிரத்யோக மருத்துவமனை அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் கடுமான பணிகள் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில் முடிக்கப்படும். இந்த குழந்தைகள் உயர் பன்னோக்கு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மொத்த பரப்பளவு 3,15,290 சதுர அடி, தரைத்தளம் - அவசர சிகிச்சை பிரிவு, புற நோயாளிகள் பிரிவு, கதிரியக்கப் பிரிவு - 45,209 சதுர அடி. முதல் தளம் - டயாலிசிஸ் பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, பொது வார்டுகள் மற்றும் இயக்குநர் அலுவலகம் - 43,836 சதுர அடி. இரண்டாம் தளம் - பொது வாடுகள் மற்றும் தனிநபர் வார்டுகள் - 43,836 சதுர அடி. மூன்றாம் தளம் - பொது வார்டுகள், தனி நபர் வார்டுகள் மற்றும் தனி அறைகள் - 43,836 சதுர அடி. நான்காம் தளம் - ஆராய்ச்சி ஆய்வகம், பொதுவாதுகள் மற்றும் தனிநபர் வார்டுகள் - 43,836 சதுர அடி. ஐந்தாம் தளம் - மைய அலுவலகம், ரத்த வங்கி மற்றும் நிர்வாக அலுவலகம் - 43,836 சதுர அடி. ஆறாம் தளம் - அறுவை சிகிச்சை அரங்குகள், அதி தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சைக்கு பிந்தய வார்டுகள் - 45,155 சதுர அடி. மத்திய அரசோடு இணைந்து தேசிய முதியோர் நலம் மருத்துவமனை ஒன்று கடந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. உலக அளவில் இதுபோன்றதொரு குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனை வேறு எந்த நாட்டிலும் இல்லை. உலக அளவில் மிகப்பெரிய ஒரு மருத்துவமனை இங்கு அமைய உள்ளது. கடந்த வாரம் இதற்கான ஒப்புதலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்திருந்தார். தமிழ்நாட்டில் தான் முதல்முறையாக குழந்தைகளுக்கு என பிரத்தேகமாக 6 ஏக்கர் பரப்பளவில் அரசு மருத்துவமனை அமைய உள்ளது. இதற்கென 487 கோடியே 66 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணி இரண்டு ஆண்டுக்குள் முடிய வேண்டும் என ஒப்பந்த காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச அளவிலான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பணிகள் வழங்கப்படும். குழந்தைகளுக்கான மருத்துவம், குழந்தை தீவிர சிகிச்சை மருத்துவம், எழும்பியல், நரம்பியல், சிறுநீரக அறுவை சிகிச்சை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என குழந்தைகளுக்கான பல்வேறு மருத்துவ சேவை மற்றும் ஆய்வகங்களும் இந்த மருத்துவமனையில் அமைய உள்ளது. இந்த மருந்துவமனை கண்காணிப்பு, செலவு என ஒட்டு மொத்தமாக அனைத்தையும் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் ஏற்றுக்கொள்ளும் என தெரிவித்தார்.
Next Story