தளபதி லயன்ஸ் சங்கத்தாரின் இலவச கண் சிகிச்சை முகாம்

X
Komarapalayam King 24x7 |22 Jun 2025 9:34 PM ISTகுமாரபாளையத்தில் தளபதி லயன்ஸ் சங்கத்தாரின் சார்பில் நடைபெற்று கண் சிகிச்சை முகாமில் நூற்றுக்கு மேற்பட்டோர் பயனடைத்தனர்
குமாரபாளையத்தில் தளபதி லயன்ஸ் சங்கத்தாரின் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்ததுகுமாரபாளையத்தில் தளபதி லயன்ஸ் சங்கத்தாரின் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் பட்டய தலைவர் ஜெகதீஷ் தலைமையில் நடந்தது. மாவட்ட பசிப்பிணி திட்ட தலைவர் சண்முகசுந்தரம் முகாமை தொடங்கி வைத்தார். ஈரோடு அரசன் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் பங்கேற்று, முகாமில் பங்கேற்ற பொதுமக்களை பரிசோதித்து மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கினர். இதில் 123 பயனாளிகள் பங்கேற்றனர். கண் அறுவை சிகிச்சைக்கு 23 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, ஈரோடு அரசன் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முகாமில் சங்க தலைவர் கதிர்வேல், செயலர் சிவராமன், பொருளர் தர்மலிங்கம், மாதேஸ்வரன் உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
Next Story
