வெள்ளிங்கிரி கோவிலில் காட்டு யானை ஆதிக்கம்: கடைகள், அலுவலகம் சேதம்

வெள்ளிங்கிரி கோவிலில் காட்டு யானை ஆதிக்கம்: கடைகள், அலுவலகம் சேதம்
X
உணவு தேடி வந்த யானை, கடைகளை சேதப்படுத்தி சென்றுள்ளது.
வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் பகுதியில் நேற்று உணவு தேடி வந்த ஒற்றை காட்டு யானை, கோவில் அடிவாரத்தில் உள்ள கடைகளை உடைத்து சேதப்படுத்தியது. மேலும் கோவில் அலுவலக கதவுகளையும் தட்டி வளைத்து விட்டது. கடந்த நாட்களில் டாப்ஸ்லிப்பில் இருந்து கொண்டு வந்த கும்கி யானைகள் இருந்தபோது காட்டு யானை வரவில்லை. ஆனால் அவை திரும்ப அனுப்பப்பட்ட பின் மீண்டும் அதிகாலை 3 மணியளவில் யானை வந்து தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவத்தால் அங்கு கடை நடத்தும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். யானை அட்டகாசம் மீண்டும் நடைபெறாமல் இருக்க, வனத்துறையினர் ரோந்து நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். மேலும், யானை வரக்கூடிய நேரங்களில் நிரந்தர வனக்காவல் குழு ஒருவரை நியமிக்க கோவில் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
Next Story