கோவை: கொள்ளை முயற்சி – போதையில் தூங்கிய தொழிலாளி கைது!

X
கோவை சுந்தராபுரத்தில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம் மையத்துக்குள் தர்மபுரியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ராஜேஷ் (வயது 30) மது போதையில் உளி, சுத்தியலுடன் தூங்கிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. வங்கியின் பாதுகாப்பு அமைப்பினர் இது குறித்து சுந்தராபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் ராஜேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

