கோவை: காந்திபுரம் பேருந்து நிலையத்தில் அதிரடி சோதனை

காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் உள்ளிட்ட நான்கு முக்கிய பேருந்து நிலையங்களில், காட்டூர் போலீசார் 20-க்கும் மேற்பட்ட போலீசாருடன் மோப்பநாய் உதவியுடன் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் உள்ளிட்ட நான்கு முக்கிய பேருந்து நிலையங்களில், காட்டூர் போலீசார் 20-க்கும் மேற்பட்ட போலீசாருடன் மோப்பநாய் உதவியுடன் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அதிகம் திரண்டு வரும் இடமாகக் காணப்படும் காந்திபுரத்தில், போதைப் பொருள் கடத்தல் சந்தேகத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது. மேலும், கேரளா மற்றும் கர்நாடகா செல்லும் பேருந்துகளிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையால் பேருந்து நிலையங்களில் பரபரப்பான சூழல் நிலவியது.
Next Story