நாம்தமிழர் கட்சி தொகுதி அலுவலகம் திறப்பு

X
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வரும் 2026 -ல் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியை வலுப்படுத்தும் நோக்கில் தற்போது நாகர்கோவில் மையப் பகுதியான புலவர் விளையில் நாம் தமிழர் கட்சியினர் அலுவலகம் திறக்கப்பட்டது. நாம் தமிழர் நாகர்கோவில் சட்டமன்ற வேட்பாளர் முத்துக்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலையிலிருந்து அலுவலகம் வரை வெற்றி கோஷமிட்டபடி நடந்து வந்து அலுவலக திறப்பு விழா நடத்தினர். புதிய அலுவலகத்தை மூத்த நிர்வாகி சொக்கலிங்கம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மற்றும் மகளிர் அணி , இளைஞர் அணி , குருதி கொடை பாசறை , இளைஞர்பாசறை , உட்பட அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
Next Story

