ஜே. சி. ஐ அமைப்பின் சார்பில் ரத்ததான முகாம்

X
மார்த்தாண்டம் ஜே. சி. ஐ அமைப்பு சார்பில் இலவச ரத்ததான முகாம் மற்றும் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு முகாம் ஆகியவை ஆற்றூர் சிஎஸ்ஐ கம்யூனிட்டி ஹாலில் வைத்து நேற்று நடைபெற்றது. ஜேசிஐ தலைவர் அனுசியா ஜாண் அனைவரையும் வரவேற்று முகாமை தொடங்கி வைத்து பேசினார். கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த முகாமில் ஏராளமான இளைஞர்கள் ரத்ததானம் செய்தனர். ரத்ததானம் செய்ய இளைஞர்களை ஏற்பாடு செய்திருந்த தொண்டு நிறுவன நிர்வாகிகளுக்கு ஜே.சி.ஐ அமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். போதகர் கிறிஸ்டோபர் இயேசு மணி, ஜேசிஐ அமைப்பை சேர்ந்த சிவராம் குமார், டாக்டர் ராகேஷ் ஆகியோர் பாராட்டி பேசினார்கள்.
Next Story

