கோவை: மீன்பிடித் தடைக் காலம் நிறைவு - அலைமோதிய கூட்டம்

கோவை: மீன்பிடித் தடைக் காலம் நிறைவு - அலைமோதிய கூட்டம்
X
மீன்பிடி தடைக் காலம் நிறைவடைந்ததை அடுத்து, கோவை உக்கடம் மீன் சந்தையில் மீன் பிரியர்கள் கூட்டம் அலைமோதியது.
மீன்பிடி தடைக் காலம் நிறைவடைந்ததை அடுத்து, கோவை உக்கடம் மீன் சந்தையில் நேற்று மீன் பிரியர்கள் கூட்டம் அலைமோதியது. மீன் வரத்து அதிகரித்ததுடன், விலைகளும் கணிசமாக குறைந்தன. வஞ்சரம் கடந்த வாரம் 1300 ரூபாயிலிருந்து இப்போது 700 ரூபாய்க்கும், பாறை 600ல் இருந்து 320 ரூபாய்க்கும், மத்தி 400ல் இருந்து 200 ரூபாய்க்கும், நெத்திலி 420ல் இருந்து 250 ரூபாய்க்கும், செம்மீன் 650ல் இருந்து 400 ரூபாய்க்கும், வாவல் 900ல் இருந்து 620 ரூபாய்க்கும், அயிலை 450ல் இருந்து 250 ரூபாய்க்கும், சங்கரா 400ல் இருந்து 260 ரூபாய்க்கும், கொடுவா 850ல் இருந்து 550 ரூபாய்க்கும் என விலை குறைந்துள்ளது. நண்டு விலை 680ல் இருந்து 430 ரூபாயாக குறைந்துள்ளது. விலை வீழ்ச்சியால் மக்கள் அதிக அளவில் வருகை தந்ததால் மீன் சந்தை பரபரப்பாக காணப்பட்டது.
Next Story