கோவை: கஞ்சா விற்பனை- ஒருவர் கைது !

X
கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் Operation – Drug Free கோவை திட்டத்தின் கீழ், சூலூர் பகுதியில் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். ரகசிய தகவலின் அடிப்படையில் சூலூர் போட் ஹவுஸ் அருகே சோதனை செய்த போலீசார், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த கோபாலகிருஷ்ணன் (21) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்ற காவலுக்கு ஒப்படைக்கப்பட்டார்.
Next Story

