ராமநாதபுரம் திமுகவின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது

முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திமுகவின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
ராமநாதபுரம் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு திமுக கட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் திமுகவின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டமானது நடைபெற்று வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் போக்குவரத்து பணிமனை அருகே ராமநாதபுரம் வடக்கு நகர் செயலாளரும் நகர் மன்ற உறுப்பினருமான ஆர்.கே கார்மேகம் தலைமையில் ராமநாதபுரம் வடக்கு நகர் இளைஞர் அணி அமைப்பாளர் மகேந்திரன் ஏற்பாட்டில் திமுகவின் சாதனை விளக்க பொதுக்கூட்டமானது சிறப்பாக நடைபெற்றது இதில் திமுகவின் நான்காண்டு சாதனைகள் குறிப்பாக மகளிர் காண கட்டணமில்லா பேருந்து பயணம்,மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை எடுத்துக் கூறியும் நான்காண்டு சாதனங்களை மக்களிடம் விளக்கியும் இந்த சாதனை விளக்க பொதுக்கூட்டமானது சிறப்பாக நடைபெற்றது இதில் திமுக மாநில, மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
Next Story