மனுக்கள் எழுதும் நபர்களை சந்தித்த ஆட்சியர்

மனுக்கள் எழுதும் நபர்களை சந்தித்த ஆட்சியர்
X
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து மனுக்கள் எழுதும் நபர்களை சந்தித்து குறைகளை கேட்டு அறிந்த மாவட்ட ஆட்சியர்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு பத்துக்கும் மேற்பட்டோர் தினம்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவிப்பதற்காக வரும்பொழுது அவர்களுக்காக மனுக்கள் எழுதி தருகின்றனர். தினம்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாவட்ட ஆட்சியர் வரும்பொழுது இவர்களை பார்த்ததாகவும் இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் சரவணன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும்போது திடீரென காரை நிறுத்தி மனுக்கள் எழுதும் நபர்களிடம் நேரடியாக தரையில் அமர்ந்து பொதுமக்களுக்காக எழுதிக் கொடுக்கும் மனுக்களுக்கு எவ்வளவு பணம் வாங்கிக்கொண்டு மனுக்கள் எழுதி தருகிறீர்கள் உங்களுக்கு எத்தனை குழந்தைகள் எத்தனை வருடங்களாக மனுக்கள் எழுதி வருகிறீர்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் மேலும் அரசு வழங்கும் திட்டங்கள், பென்ஷன் உங்களுக்கு வந்து சேர்கிறதா எனவும் தொடர்ந்து பாலத்தின் அடியில் அமர்ந்து மனுக்கள் எழுதி வருகிறீர்கள் மழைக்காலம் வெயில் காலத்தில் என்ன செய்வீர்கள் என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
Next Story