வீட்டைச் சுற்றி பலரும் மலம் கழிப்பதால் கைக்குழந்தையுடன் ஆட்சியரிடம் மனு .

வீட்டைச் சுற்றி பலரும் மலம் கழிப்பதால் கைக்குழந்தையுடன் ஆட்சியரிடம் மனு .
வீட்டைச் சுற்றி பலரும் மலம் கழிப்பதால் கைக்குழந்தையுடன் ஆட்சியரிடம் மனு . கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. மாயனூர் பகுதியை சேர்ந்த காயத்ரி என்ற பெண்மணி கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது. மாயனூர் மாரியம்மன் கோயில் வீதியில் 40 குடும்பங்கள் உள்ளன். இந்த வீதியில் கடைசி வீட்டில் குடியிருந்து வருகிறோம். மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்த பொதுமக்கள் எங்கள் வீட்டின் எதிரே இருந்த கோவிலுக்கு சொந்தமான காட்டுப் பகுதியில் இயற்கை உபாதையை கழிக்க பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கோயில் நிர்வாகம் தங்களுக்கு சொந்தமான இடத்தில் வேலி போட்டு அடைத்துவிட்டனர். இதனால் மாரியம்மன் கோவில் வீதியில் வசிக்கும் மக்கள் எங்கள் வீட்டை சுற்றியும் மலம் கழித்து வருகின்றனர். இதனால் எங்கள் வீட்டில் இருக்க முடியாமல் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர் கேடு ஏற்பட்டு உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் இது குறித்து உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story