தெற்கு தெருவில் மது போதையில் வந்த கணவனை திட்டிய மனைவி விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்த கணவன்.

தெற்கு தெருவில் மது போதையில் வந்த கணவனை திட்டிய மனைவி விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்த கணவன்.
தெற்கு தெருவில் மது போதையில் வந்த கணவனை திட்டிய மனைவி விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்த கணவன். கரூர் மாவட்டம், பசுபதி பாளையம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து வயது 50. இவரது மனைவி கீதா வயது 46. மாரிமுத்து அண்மைக்காலமாக மது போதைக்கு அடிமையாக இருந்தார். இந்நிலையில் ஜூன் 22ஆம் தேதி மாலை 4 மணியளவில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த அவரை அவரது மனைவி திட்டி உள்ளார். இதனால் விரக்தி அடைந்த மாரிமுத்து அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கீதா அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்த மாரிமுத்துவின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சபக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்,
Next Story