உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முதல் மூன்று இடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு பரிசு

உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முதல் மூன்று இடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு பரிசு
X
உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முதல் மூன்று இடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
அரியலூர் ஜூன்.23- உடையார் பாளையம் அரசுமகளிர் மேல் நிலைப்பள்ளியில் (2024-2025)கல்வியாண்டில் 10,11,12ஆம்வகுப்பு மாணவிகளுக்கு கல்விஉதவித்தொகை, கேடையம், மெடல் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் முனைவர் முல்லைக்கொடி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் இங்கர்சால் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சேப்பெருமாள், கவுன்சிலர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடையார்பாளையம் தக்ஷ்ரா கல்விஅறக்கட்டளை சார்பில் நிறுவனர் பொறியாளர் சிவக்குமார் கலந்துகொண்டு முதல் மூன்று இடம் 10,11,12 வகுப்பில் மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தொகை, கேடயம், மெடல் ஆகியவற்றை வழங்கினார். மாணவிகளிடம் தன்னம்பிக்கை விடா முயற்சியுடன் கல்வி பயிலவேண்டும். உங்கள் வாழ்வை வளமாக்கி சாதனை பெண்களாக சமுதாயம் போற்றி உயர்வடையச்செய்யும், அதனால் இந்த படிகக்கின்ற காலத்தை வீனாக்கமல் வரும் கல்வியாண்டும் அரசுப்பொதுத்தேர்வில் அனைவரும் வெற்றி பெற்று மாநில அளவில் அதிக மதிப்பெண் எடுத்து இந்த ஊருக்கும், பள்ளிக்கும் பெறுமை சேர்க்கவேண்டும், மேலும் 100% சதவீதம் தேர்ச்சிபெற உழைத்த தலைமையாசிரியர்,மற்றும் ஆசிரியர்களுக்கும், அலுவலர்களுக்கும், சத்துணவு பணியாளர்களுக்கும், சிறப்புசெய்து நினைவுபரிசு வழங்கிபாராட்டி ஊக்கப்படுத்தினார். நிகழ்வில் அறக்கட்டளை பொறுப்பாளர்கள் கொளஞ்சிநாதன், வேல்முருகன், செல்விசிவக்குமார், சுத்திகா, சஞ்சை, சந்தோஷ், நவின், மற்றும் ஆசிரியர்கள் செல்வராஜ், சாந்தி, மஞ்சுளா, தமிழரசி, காமராஜ், இராஜசேகரன், உடற்கல்வி ஆசிரியர் ஷாயின்ஷா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர், நிகழ்வை தமிழாசிரியர் இராமலிங்கம் ஒருங்கினைத்தார், முடிவில் பாவைசங்கர் நன்றி கூறினார்.
Next Story