நடு ரோட்டில் பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி

X
குண்டடம் - தாராபுரம் ரோடு குண்டடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே நடுரோட்டில் பள்ளம் போல் குழி ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தில் இறங்கி ஏறும் வாகனங்கள் குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து சிறு சிறு காயங்களுடன் உயிர்த்தப்பிய நிகழ்வும் நடைபெற்று வருகிறது. மேலும் நான்கு வழிச்சாலை என்பதால் கோவை, மதுரை, தேனி, திண்டுக்கல் போன்ற வெளி மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய பிரதான சாலை என்பதால் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் மற்றும் கனரக வாகனங்கள் அதிக அளவில் செல்வதால் இரவு நேரங்களில் இந்த பகுதியில் வாகன ஓட்டுனர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பெரும் விபத்து ஏற்படும் முன் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக இந்த பள்ளத்தை சரி செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

