டாஸ்மாக் பாறை வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை

டாஸ்மாக் பாறை வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை
X
பல்லடம் அருகே அடிக்கடி தகராறு ஏற்படுவதால் டாஸ்மாக் பாறை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்
.பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கரடிவாவி மற்றும் அனுப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் மனு கொடுத்தனர். அந்த மனுவில் பல்லடம் அருகே உள்ள கரடிவாவியில் இருந்து அனுப்பட்டி செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு செயல்படும் பாரில் பணிபுரியும் ஊழியர்கள் கடைக்கு வருபவர்களை தரக்குறைவாக பேசுவதும் அவர்களை தாக்குவதுமாக அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படுகிறது. நேற்று முன்தினம் அந்த வழியே காரில் சென்ற கார்த்தி என்பவரை மதுபான பாரில் பணிபுரியும் ஸ்ரீராம், ராஜதுரை, பாண்டி உள்ளிட்டோர் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவர் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபோல் பாரில் பணிபுரியும் ஊழியர்களால் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. எனவே அந்தப் பகுதியில் பார் செயல்பட அனுமதிக்க கூடாது அல்லது வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதை அடுத்து பல்லடம் காவல்துணை கண்காணிப்பாளர் சுரேஷ் இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் காவல்துறையினருக்கு விசாரணை செய்ய அறிவுறுத்தியுள்ளார்.
Next Story