வாகனம் மோதி முதியவர் பலி

X
பல்லடம் அருகே உள்ள குன்வங்கள் பாளையம் பகுதியில் பல்லடம் திருப்பூர் மெயின் ரோட்டில் கடந்த 11ம் தேதி இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் காயம் அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் பல்லடம் காவல்துறையினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். விசாரணை அவரது பெயர் ராஜேந்திரன் என்பது மட்டும் தெரியவந்துள்ளது.ஊர் பெயர் தெரியவில்லை இதுகுறித்து பல்லடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

