அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றிய ஊராட்சி பகுதிகளில் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்.

X
அரியலூர் மாவட்டத்தில் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் .சா.சி.சிவசங்கர் ரூ3 கோடியே 13 இலட்சம் மதிப்பிலான 39 பணிகளை துவக்கி வைத்தார். அரியலூர் ஜூன்.23 - அரியலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் ரூ.46.92 இலட்சம் மதிப்பீட்டில் 04 முடிவுற்ற திட்டப்பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ரூ3 கோடியே 13 இலட்சம் மதிப்பிலான 39 பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி கலந்துகொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, அரியலூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் கிராம சாலைகளை மேம்படுத்துதல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்தல், பள்ளி வகுப்பறைகள் கட்டுதல், அங்கன்வாடி மையக் கட்டடங்கள் கட்டுதல், போர்வெல் மற்றும் சிமெண்ட் தொட்டி அமைத்தல், கதிரடிக்கும் களம் அமைத்தல், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், ஏரிகள் புனரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் ரூ.46.92 இலட்சம் மதிப்பீட்டில் 4 முடிவுற்ற திட்டப்பணிகளும், ரூ.2.66 கோடி மதிப்பீட்டில் 35 புதிய திட்டப்பணிகளும் என மொத்தம் ரூ.3.13 கோடி மதிப்பீட்டிலான பணிகளை தொடங்கி வைத்தார். அதன்படி செந்துறை ஊராட்சி ஒன்றியம், தளவாய் ஊராட்சி சிலுப்பனூர் ஆதிதிராவிடர் பகுதியில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ரூ.7 இலட்சம் மதிப்பீட்டில் புதிய போர்வெல் மற்றும் சிமெண்ட் தொட்டி அமைக்கும் பணியையும், தொடர்ந்து, தளவாய் ஊராட்சி சேந்தமங்கலம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் ரூ.7 இலட்சம் மதிப்பீட்டில் புதிய போர்வெல் மற்றும் சிமெண்ட் தொட்டி அமைக்கும் பணியையும், பின்னர், தளவாய் ஊராட்சி செங்கமேடு மண்குட்டை குளத்தில் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணியையும், தொடர்ந்து, தளவாய் ஊராட்சி மதுராநகர் நடுத்தெருவில் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் 65.50 மீ சிமெண்ட் சாலை அமைக்கும் பணியையும், பின்னர், தளவாய் ஊராட்சி ஈச்சங்காடு பகுதியில் ரூ.3.84 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியையும், தொடர்ந்து, தளவாய் ஊராட்சி ஈச்சங்காடு ஆதிதிராவிடர் பகுதி உள்ளே செல்லும் சாலையில் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியையும் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் துவக்கி வைத்தார். பின்னர், த.கூடலூர் கிராமத்தில் ரூ.18.42 இலட்சம் மதிப்பீட்டில் 30ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தொடர்ந்து த.கூடலூர் ஆதிதிராவிடர் பகுதியில் ரூ.7 இலட்சம் மதிப்பீட்டில் போர்வெல் மற்றும் சிமெண்ட் தொட்டி அமைக்கும் பணியையும், ரூ.7.53 இலட்சம் மதிப்பீட்டில் த.கூடலூர் மாரியம்மன் கோவில் முதல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வரை சிமெண்ட் சாலை அமைக்கும் பணியையும், பின்னர், தளவாய் ஊராட்சி புதிய ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் ரூ.4.52 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியையும், பின்னர், தளவாய் ஊராட்சியில் ரூ.17.50 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியையும், ரூ.1.75 இலட்சம் மதிப்பீட்டில் தளவாய் ஊராட்சி ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியையும் துவக்கி வைத்து பணிகளை உரிய காலத்திற்குள் முடித்து விரைவாக முடித்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து, சன்னாசிநல்லூர் ஆதிதிராவிடர் பகுதியில் ரூ.3.55 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியையும், தொடர்ந்து சன்னாசிநல்லூர் தெற்கு தெருவில் ரூ.6.18 இலட்சம் மதிப்பீட்டில் தெருவின் இருபுறமும் கழிவுநீர் கால்வாயுடன் கூடிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியையும், பின்னர், சன்னாசிநல்லூர் பி.சி.தெருவில் ரூ.9.99 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியையும், தொடர்ந்து சன்னாசிநல்லூர் ஊராட்சியில் ரூ.9.21 இலட்சம் மதிப்பீட்டில் பச்சையம்மன் கோவில் அருகில் கதிரடிக்கும் களம் அமைத்தல் பணியையும், பின்னர், ரூ.7.39 இலட்சம் மதிப்பீட்டில் சன்னாசிநல்லூர் ஆங்கியார் குட்டை ஆழப்படுத்தும் பணியையும் துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, சன்னாசிநல்லூர் ஊராட்சி பழைய ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியையும், பின்னர், சிவராமபுரம் தெற்கு தெருவில் ரூ.4.03 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியையும், தொடர்ந்து சன்னாசிநல்லூர் ஊராட்சி சிவராமபுரம் பகுதியல் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் கல்வெர்ட் அமைக்கும் பணியையும், பின்னர், அங்கனூர் தெற்கு தெருவில் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியையும், தொடர்ந்து சன்னாசிநல்லூர் ஊராட்சியில் ரூ.3.75 இலட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் ரூ.3.55 இலட்சம் மதிப்பீடு;டிலும் சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணியையும், பின்னர் சன்னாசிநல்லூர் ஊராட்சியில் ரூ.45.05 இலட்சம் மதிப்பீட்டில் பழைய அங்கனூர் மயானம் தார் சாலை அமைக்கும் பணியையும், தொடர்ந்து ரூ.3.94 இலட்சம் மதிப்பீட்டில் சன்னாசிநல்லூர் ஊராட்சியில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியையும் துவக்கி வைத்து, பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர், குழுமூர் ஊராட்சியில் ரூ.6.80 இலட்சம் மதிப்பீட்டில் மங்கான்குளம் புனரமைக்கும் பணியையும், தொடர்;ந்து, குழுமூர் ஊராட்சியில் ரூ.12 இலட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டிலும் சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணியையும், பின்னர், ரூ.7.12 இலட்சம் மதிப்பீட்டில் குழுமூர் ஊராட்சியல் மெட்டல் சாலை அமைக்கும் பணியையும், தொடர்;ந்து, குழுமூர் பெரியார்நகரில் ரூ.6.53 இலட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியையும், பின்னர், குழுமூர் அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் ரூ.2.50 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியையும் துவக்கிவைத்தார். தொடர்ந்து, குழுமூர் ஊராட்சியில் ரூ.9.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார். அதனைத்தொடர்ந்து, வஞ்சினபுரம் ஊராட்சி, நல்லநாயகபுரம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் ரூ.8.80 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை துவக்கிவைத்தார். பின்னர், நல்லநாயகபுரம் கிராமத்தில் ரூ.9.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்;திகரிப்பு நிலையத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தொடர்;ந்து, ரூ.9 இலட்சம் மதிப்பீட்டில் நல்லநாயகபுரம் எம்.பி.சி தெருவில் கதிரடிக்கும் களம் அமைத்தல் பணி மற்றும் ரூ.10.55 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார். பின்னர், வஞ்சினாபுரம் ஊராட்சியில் ரூ.9.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார். தொடர்ந்து பெருமாண்டி எம்.பி.சி.தெருவில் ரூ.9.59 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியையும் என மொத்தம் 3 கோடியே 13 இலட்சம் மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகள் மற்றும் புதிய திட்டப்பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார். பின்னர், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: சிமெண்ட் ஆலைகளுக்கான குவாரிகள் செயல்படுவதால் சில இடங்களில் குடிநீர் மட்டம் இறங்கி இருக்கிறது. சில இடங்களில் உப்பு நீராக இருக்கிறது. பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு கிராமங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்றையதினம் நல்லநாயகபுரம், குழுமூர் ஆகிய கிராமங்களில் குடிநீர் சுத்திகரிப்பு மையங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு குடிநீர் உப்பு நீராக இருந்ததன் காரணமாக சீறுநீரக பாதிப்புகள், உடல் கோளாறுகள் ஏற்படுகிறது என மக்கள் தெரிவித்ததை தொடர்ந்து சிறப்பு செயல்பாடாக ஆர்.ஓ சிஸ்டம் முறையில் குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், விடியல் பயணம் திட்டங்கள் முதன்மை திட்டங்களாக விளங்குவதுடன், பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த இரண்டு திட்டங்களும் பெண்களுக்கு விடுதலை உணர்வை ஏற்படுத்துகிறது. அவர்கள் சுதந்திரமாக சொந்த காலில் நிற்பதற்கான வாய்ப்பினை இத்திட்டங்கள் ஏற்படுத்துகிறது என போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சிகளில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, செந்துறை வட்டாட்சியர் வேலுமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், ரவி மற்றும் இதர அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். -
Next Story

