பச்சம்பட்டியில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல் மூன்று பேர் படுகாயம்.
பச்சம்பட்டியில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல் மூன்று பேர் படுகாயம். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் புளிய மரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் வயது 38. இவர் ஜூன் 20ஆம் தேதி காலை 9 மணி அளவில் கரூர் - திண்டுக்கல் சாலையில் அவரது டூவீலரில் சென்றார். இதேபோல திண்டுக்கல் மாவட்டம் , குஜிலியம்பாறை பகுதியைச் சேர்ந்த சுபாஷ் வயது 28. அருகில் உள்ள வல்லக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் வயது 32. இவர்கள் இருவரும் அதேசாலையில் எதிர் திசையில் வந்து கொண்டிருந்தனர். இருவரது வாகனமும் பச்சம்பட்டி பகுதியில் செயல்படும் பெட்ரோல் பங்க் எதிரே வந்தபோது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மூவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் சுபாஷ் ,பாலசுப்பிரமணியம் ஆகிய இருவரையும் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும்,ராஜனை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்தனர். ராஜனின் மனைவி அமுதவல்லி வயது 34 அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் டூவீலரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய சுபாஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.
Next Story




