திருமண நிதி உதவி திட்ட நிகழ்வில் அமைச்சர்கள் பங்கேற்பு
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (ஜூன்.23) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் இணைந்து திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் 403 பயனாளிகளுக்கு ரூ.1,68,25,000/- மதிப்பீட்டில் திருமண நிதியுதவி மற்றும் தலா 8 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கினார்கள் . இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா மாநகர் மேயர் இந்திராணி மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story




