நான்காண்டு கால சாதனை மலரை வெளியிட்ட அமைச்சர்கள்.

X
மதுரை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டுள்ள அரசின் திட்டங்கள், முன்னேற்றத்தில் உள்ள திட்டப்பணிகள், ஒட்டுமொத்த பயனாளிகள் உள்ளிட்ட விவரங்களை உள்ளடக்கி தொகுக்கப்பட்டுள்ள ”நாடு போற்றும் நான்காண்டு... தொடரட்டும் இது பல்லாண்டு” என்ற தலைப்பிலான சாதனை மலரை இன்று( ஜூன் .23) தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகர் மேயர் இந்திராணி மதுரை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்
Next Story

