வார சந்தையில் சுங்க கட்டணம் குறித்த ஆலோசனை: ஆர்டிஓ பங்கேற்பு.

X
Paramathi Velur King 24x7 |23 Jun 2025 7:18 PM ISTபரமத்தி வேலூரில் வார சந்தையில் சுங்க கட்டணம் குறித்த ஆலோசனை: ஆர்டிஓ பங்கேற்பு.
பரமத்தி வேலூர், ஜூன்.23: நாமக்கல் மாவட்டம், வேலுார் பேரூராட்சியில் திருச்செங்கோடு ஆர்டிஓ தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வாரச்சந்தை யில் சுங்கவரியை ரத்து செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத் திடம் தெரிவித்து இறுதி முடிவு எடுக்கப்படும் ஆர்டிஓ கூறியுள் ளார். பரமத்தி வேலூரில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வாரச் சந்தை நடைபெற்று வருகிறது. இச் சந்தைக்கு பலபகுதிகளை சேர்ந்த விவசாயிகள் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் விவசாய பொருட்களை விற்பனை கொண்டு வருகின்றனர். இதற்காக விவசாயிகளிடம் வேலூர் பேரூராட்சி நிர்வாகம் சுங்கவரி வசூலித்து வருகிறது. இது கடந்த ஆண்டைவிட அதிகமாக இருப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து சுங்கவரி கட்டணத்தை ஆய்வு செய்து குறைப்பது குறித்த ஆய்வு கூட்டம் வேலூர் பேரூராட்சி அலுவலகத்தில் திருச்செங்கோடு ஆர்டிஓ சுகந்தி தலைமையில் நடை பெற்றது. ஆய்வு கூட்டத்தில் விவ சாயிகளின் கோரிக்கையை, மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கையாக சமர்பிக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் இதன் முடிவு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்தனர்.
Next Story
