மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் உலக யோகா தினம்..

X
Rasipuram King 24x7 |23 Jun 2025 7:28 PM ISTமகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் உலக யோகா தினம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் சர்வதேச உலக யோகா தினம் மிகச்சிறந்த முறையில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவினை பள்ளியின் தலைவர் க.சிதம்பரம், கல்வி நிறுவனர் சுப்பிரமணியம், இயக்குநர் மணிவண்ணன், பள்ளியின் முதல்வர் மோகன்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ராஜசேகரன் வரவேற்புரையாற்றினார். தொடக்க விழா நாயகரான தாளாளர், க. சிதம்பரம் யோகாவின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி மாணவர்களை உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து பள்ளி முதல்வர் மோகன் குமார் யோகாசனத்தின தேவை பற்றியும் ஆசனங்களினுடைய பயன்களைப் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார். கல்வி இயக்குனர் சுப்பிரமணியன் உடல் உறுதியின் முக்கியத்துவத்தையும், மன உறுதியின் முக்கியத்துவத்தையும் பற்றி மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். பள்ளியின் உடற்கல்வி ஆசிரியை நசீரா ஜாஸ்மின் நன்றியுரையாற்றினார். இதில் பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள், நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story
