வேளாண்மைத்துறை பணியாளர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை களைந்திட வேண்டும் தமிழ்நாடு அரசு வேளாண்மை பட்டதாரிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

வேளாண்மைத்துறை பணியாளர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை களைந்திட வேண்டும்  தமிழ்நாடு அரசு வேளாண்மை பட்டதாரிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
X
செயற்குழு
வேளாண்மைத்துறை பணியாளர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை களைந்திட வேண்டும் என தமிழ்நாடு அரசு வேளாண்மை பட்டதாரிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு அரசு வேளாண்மை பட்டதாரிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு வந்தவர்களை சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் செ.செல்வராசு வரவேற்றார். சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மாநில காவல்துறை துணைத் தலைவர் ஆர்.சத்யசுந்தரம் கலந்து கொண்டு, சிறப்புரையாற்றியும், பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற சங்க நிர்வாகிகளின் குழந்தைகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார். கூட்டத்தில் மாநிலத் தலைவர் எல்.சசிக்குமார், மாநிலச் செயலாளர் முத்துராம், மாநில இணைச் செயலாளர் வி.சதீஷ்குமார், மாநிலப் பொருளாளர் எஸ்.வேலு, மாநில இணைச்செயலாளர்  எம்.உமாமகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: நாட்டிலேயே முதன் முறையாக வேளாண்மை துறைக்கென தனி நிதிநிலை அறிக்கையை கடந்த நான்கு ஆண்டுகளாக வழங்கி, வேளாண் கருத்துக்காட்சிகளை திருச்சி மற்றும் பெருந்துறை நகரிலே சிறப்பாக நடத்தி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை எடுத்துரைக்கும் தமிழக முதல்வருக்கும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருக்கும்,  வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளருக்கும், வேளாண்மை இயக்குநருக்கும்,  வேளாண்மை ஆணையருக்கும் இக்கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. வேளாண்மைத்துறையில் பணியாற்று் பணியாளர்களுக்கு, நீண்ட நாள் கோரிக்கையான ஊதிய முரண்பாடுகளை களைந்து மீண்டும் பழையபடி ஊதியத்தை வழங்க வேண்டும். வேளாண்மை துறையில் மகளிர் அதிக அளவில் பணிபுரியும் நிலையில் அவர்களுக்கு, பணியிடத்தில் பாதுகாப்பான சூழலும், மகளிர் பணிச்சுமை மற்றும் மன குழப்பங்களை குறைக்கிற நடவடிக்கை எடுக்க வேண்டு. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் வருவாய், உணவு உற்பத்தியும் பெருக்கி தரமான விளைபொருட்கள் அனைவருக்கும் தங்கு தடையின்றி கிடைத்திட அரசின் நலத்திட்டங்கள், தொழில்நுட்பங்களையும் உரிய நேரத்தில் வழங்கிட வேண்டுமென என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மூத்த வேளாண் வல்லுநர்கள் கலைவாணன், பழனியப்பன், தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கோ.வித்யா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த வேளாண்மைத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story