மொழிப்போர் தியாகி பட்டுக்கோட்டை அழகிரிசாமி பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

X
தஞ்சாவூர் மாவட்டம், மொழிப்போர் தியாகி பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் 125 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில், பட்டுக்கோட்டையில் அமைந்துள்ள அன்னாரின் மணிமண்டபத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பிரியங்கா பங்கஜம், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி ஆகியோர் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மொழிப்போர் தியாகி பட்டுக்கோட்டை அழகிரிசாமி தியாக உணர்வை பறைசாற்றும் வகையில், பட்டுக்கோட்டையில் அன்னாரின் நினைவு மணிமண்டபம் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. அவரது, பிறந்த நாள் விழா செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பிரியங்கா பங்கஜம், தமிழக அரசின் சார்பில் மொழிப்போர் தியாகி அழகிரிசாமி திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் எஸ்.சங்கர், நகரமன்றத் தலைவர் சண்முகப் பிரியா, வட்டாட்சியர் தர்மேந்திரா, பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் கு,கனிராஜ், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) செ.கார்த்திக்ராஜ், தியாகி அழகிரிசாமியின் பேரன் சுப்பையாராஜா, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் பழனிவேல் மற்றும் அரசு அலுவலர்கள், ஏராளமான பொதுமக்கள் அன்னாரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
Next Story

