குப்பையால் நோய் தொற்று பரவும் அபாயம்!

குப்பையால் நோய் தொற்று பரவும் அபாயம்!
X
வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள குப்பைகளால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள முத்து மண்டபம் செல்லும் சாலையோரம், ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் கடுமையான துர்நாற்றம் வீசுவதால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story