திமுகவின் விமர்சனங்கள் பொய்யானவை - நைனார் நாகேந்திரன் விளக்கம் !

திமுகவின் விமர்சனங்கள் பொய்யானவை - நைனார் நாகேந்திரன் விளக்கம் !
X
திமுக தோல்வி பையத்தால் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள் என நயனார் நாகேந்திரன் பேசினார்.
கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், மாநாட்டிற்கு திமுக எதிர்ப்பை வெளிப்படுத்தினாலும், மூன்றிலட்சம் பேர் முதல் நாளிலும், ஐந்துலட்சம் பேர் மாநாட்டின் நாளிலும் பங்கேற்றனர் எனத் தெரிவித்தார். சிறு இடர்ப்பாடும் இல்லாமல் மாநாடு அமைதியாக நடைபெற்றதாகவும் கூறினார். திமுகவினர் தோல்வி பயத்தில் பேசுகிறார்கள் என்றும், காவல்துறை இல்லாமல் கூட மாநாடு வெற்றிகரமாக நடந்தது குறிப்பிடத்தக்கது எனவும் விமர்சித்தார். திருமாவளவனின் திருநீர் விவகாரத்திற்கும், நீதிமன்ற அவமதிப்பு குறித்த திமுக குற்றச்சாட்டிற்கும் அவர் நேரடியாக பதிலளிக்காமல் தவிர்த்தார். அதிமுகவின் வருத்தத்தையும் வீடியோ வெளியீட்டை பற்றிய கேள்விகளையும் பார்த்துவிட்டு பதிலளிப்பேன் எனவும் கூறினார். அதேபோல, ஆர்.எஸ்.எஸ். நிகழ்வில் அதிமுக பங்கேற்றது குறித்து கேள்வி எழுப்பியபோது பதிலளிக்காமல் கடந்து சென்றார்.
Next Story