கோவை விமான நிலையத்தில் எஸ்.பி.வேலுமணி பேச்சு – சிறுவாணி அணை, பேரூர் நிகழ்ச்சி, ஆர்.எஸ்.பாரதி குறித்த விமர்சனம் !

X
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து, சிறுவாணி அணையின் நீர் நிலை குறைவால் கோவை மக்கள் அவதிப்படுகின்றனர் எனக் கூறினார். 50 அடி நீர் தேக்கத்திலிருந்து திமுக ஆட்சி 5 அடி குறைத்ததைக் கண்டித்தார். தூர்வாரும் முயற்சி அரசு கைமாறியுள்ளது என்றும், கேரளாவுக்கு செலுத்த வேண்டிய தொகையும் செலுத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார். 10 நாட்களில் எடப்பாடி பழனிச்சாமியின் அனுமதி பெற்று போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். பேரூரில் நடைபெற்ற ராமலிங்க அடிகளாரின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டது குறித்து, அது ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சி அல்ல என்றும், விழாவிற்கு தனிப்பட்ட அழைப்பின் பேரில் சென்றதாகவும் விளக்கம் அளித்தார். ஆர்.எஸ்.பாரதி கூறிய விமர்சனங்களுக்கு பதிலளித்த எஸ்.பி.வேலுமணி, அவர் எப்போதும் பொய்யே பேசுவார், மனசாட்சியில்லாதவர்கள் தான் இப்படிச் செயல்படுகிறார்கள் என்று கூறினார். முருகன் மாநாட்டில் அதிமுக அமைச்சர்கள் கலந்து கொண்டது அழைப்பின் பேரில்தான் என்றும், அது அரசியல் மாநாடு அல்ல என்றும் கூறினார். 1999-இல் திமுக, பாஜகவுடன் கூட்டணியில் இருந்ததை நினைவுபடுத்திய அவர், எங்களது தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டார் என்றும், அதிமுக ஒரு சுயமரியாதை இயக்கம்” என்றும் வலியுறுத்தினார். தேர்தலுக்காக பல கட்சிகளுடன் கூட்டணி வைப்பது இயல்பானதே ஆனால் கொள்கையை ஒருபோதும் துறக்க மாட்டோம் என்றும், இன்னும் பல கட்சிகள் எடப்பாடியின் தலைமையில் வருவார்கள் என்றும் அவர் கூறினார்.
Next Story

