பர்கூர் அருகே பஸ் படியில் பயணம் செய்த தட்டிக்கேட்ட கண்டக்டரை தக்கியவர் மீது வழக்கு.

பர்கூர் அருகே பஸ் படியில் பயணம் செய்த தட்டிக்கேட்ட கண்டக்டரை தக்கியவர் மீது வழக்கு.
X
பர்கூர் அருகே பஸ் படியில் பயணம் செய்த தட்டிக்கேட்ட கண்டக்டரை தக்கியவர் மீது வழக்கு.
கிருஷ்ணகிரி மவட்டம் பர்கூர் அருகே உள்ள ஒரப்பம் அருகே செட்டிப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (48) அரசு பஸ் நடத்துனர். இவர் நேற்று முன்தினம் மாலை இவர் டவுன் பஸ்சில் வேலை பார்த்த போது பர்கூர் குருவிநாயனப்பள்ளியை சேர்ந்த பேக்கரி கடை மாஸ்டர் துரைசாமி (28) என்பவர் ஓடும் பஸ்சில் படியில் நின்றுக்கொண்டு வந்தார். இதை தமிழ்செல்வன் அவரை படியில் பயணிக்க கூடாது. உள்ளே வாருங்கள் என்று தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் செய்து தாக்கிய தாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கண்டக்டர் தமிழ்செல்வன் கந்திகுப்பம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் துரைசாமி மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
Next Story