சோமநாத சுவாமி கோவிலில் ஆனி உத்திரப் திருவிழா கொடியேற்றம்

X
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி சோமநாதசுவாமி கோவிலில் நேற்று ஆணி உத்திரப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவாடுதுறை ஆதினத்திற்கு பாத்தியப்பட்ட ஆறுமுகநேரி சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி திருக்கோவிலில் ஆனி பெருந்திருவிழாவையொட்டி காலையில் கும்ப பூஜை, ஹோமம், யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கொடிப்பட்டம் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொவிலுக்கு எடுத்து ெசல்லப்பட்டது. காலை 5.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து கொடி மரத்திற்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்று அலங்கார தீபாராதனை காட்டப்பட்டது, இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் ெசய்தனர். மாலையில் திருநாவுக்கரசர் சுவாமி உழவாரப்பணி வீதி உலாவும், யாகசாலை பூஜையும், அஸ்திர தேவருடன் ரிஷப வாகனத்தில் திருவீதி உலா நடந்தது. வழிநெடுகிலும் தீபாராதனை நடைபெற்றது. திருவிழா நாட்களில் தினமும் காலையில் சுவாமி, அம்பாள் திருவீதி உலாவும், இரவில் சுவாமி, அம்பாள் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலி்த்து வருகின்றனர். 10-ம் திருவிழா வரை தினமும் இரவு கோவில் வளாகத்தில் பக்தி சொற்பொழிவு, பட்டிமன்றம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
Next Story

