கேஸ் சிலிண்டர் வெடித்து சமையலறை தரைமட்டம்

கேஸ் சிலிண்டர் வெடித்து சமையலறை தரைமட்டம்
X
நித்திரவிளை
குமரி மாவட்டம் நித்திரவிளை பகுதி சேர்ந்தவர் ஆங்களின் (43).  கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். நேற்று காலை வழக்கம் போல் ஆங்களின் குடும்பத்துடன் சர்ச்சுக்கு சென்று இருந்தார். அப்போது வீட்டின் அருகே அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட்டால் ஆன சமையலறையில் இருந்து கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் சமையலறை தரைமட்டமானது. மேலும் சமையல் அறையில் இருந்த அனைத்து பொருட்களும் நாசமாயின. வீட்டில் உள்ளவர்கள் குடும்பத்துடன் ஆலயத்திற்கு சென்றதால் உயிர் தப்பினர்.  தகவல் அறிந்து வரைந்து சம்பவ இடத்திற்கு சென்ற கொல்லங்கோடு தீயணைப்பு வீரர்கள் அந்த பகுதியில் தீ பரவாமல் இருக்க தீ தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
Next Story