கார் கவிழ்ந்து வாலிபர்கள் படுகாயம்

X
குமரி மாவட்டம் ஆறுகாணி மலையோர கிராம பகுதியில் இருந்து நேற்று மதியம் சொகுசு காரில் 7 வாலிபர்கள் மலையோரச் சாலையான கூட்டப்பூ சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சூரவக்காணி என்ற இடத்தில் வைத்து கார் திடீர் என நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் உள்ள ஒரு வீட்டருகே கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த வாலிபர்கள் 7 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் வாலிபர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். காரில் விபத்தில் சிக்கியவர்கள் யார்? என ஆறுகாணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story

