லஞ்சம் வாங்கிய பேரூராட்சி இளநிலை உதவியாளர் கைது

X
குமரி மாவட்டம் பாகோடு பகுதியை சேர்ந்த ஜான்சன் என்பவர் மகன் ஜெபின். இவர் தனக்கு சொந்தமாக உள்ள சுமார் 8 சென்ட் நிலத்தில் கட்டியுள்ள வீட்டின் உரிமையாளர் பெயரை மாற்றம் செய்து வீட்டு வரி ரசீது தரக்கோரி விண்ணப்பித்து உள்ளார். இது தொடர்பாக கடந்த 19-06-2025 அன்று பேரூராட்சி அலுவலகத்தை அனுப்பிய போது அலுவலகத்தில் இருந்த இளநிலை உதவியாளர் திருமதி விஜி வீட்டின் உரிமையாளர் பெயரை மாற்றம் செய்து வீட்டு வரி ரசீது வழங்க 2000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெபின் குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்து அவர்களுடைய ஆலோசனையின் படி ரசாயனம் தடவிய 2000 ரூபாய் லஞ்ச பணத்தை இன்று 23-06-2025 கொடுத்த போது இளநிலை உதவியாளர் திருமதி விஜியிடம் ரசாயனம் தடவிய 2000 ரூபாயை ஜெபின் கொடுத்தார் .அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக பாய்ந்து சென்று கையும் களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Next Story

