ராமநாதபுரம் யோகா தின கொண்டாட்டம் நடைபெற்றது

மாவட்ட ஆட்சியர் வளாகப் பகுதியில் அமைந்துள்ள விவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் யோகா தினம் வெகு சிறப்பாக பள்ளி மாணவ மாணவிகளை கொண்டு நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாக பகுதியில் அமைந்துள்ள பழமையான விவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் யோகா தினம் பள்ளி மாணவர்களை கொண்டு மிக சிறப்பாக நடைபெற்றது. யோகா தினத்தில் பள்ளியின் தாளாளர் ருத்ராநந்த சாமிகள் தலைமையில் யோகா செய்து காண்பிக்கப்பட்டது. சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக யோகா செய்து காண்பித்தனர். இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Next Story